தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாசனத்திற்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - Dam for irrigation

திருநெல்வேலி: விவசாயிகள் கோரிக்கையை ஏற்று பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்காக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் தண்ணீர் திறந்து வைத்தார்.

சீறிபாயும் தண்ணீர்

By

Published : Aug 21, 2019, 9:15 PM IST

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடக்கோரி விவசாயிகள் , பொதுமக்கள் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதை ஏற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ்பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார்.

தண்ணீர் திறந்து வைக்கும் மாவட்ட ஆட்சியர்

இது குறித்து ஆட்சியர் கூறுகையில், பாபநாசம் அணையில் இருந்து முதல் கட்டமாக விவசாயம், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை வட்டங்களில் உள்ள 24,090 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இதைதொடர்ந்து வருகின்ற 26ஆம் முதல் முதலமைச்சரின் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details