திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி நரசிங்கநல்லூரைச் சேர்ந்த திருநங்கைகள் அனு பூர்ணிமா, பவானி, அவரது கணவர் முருகன் ஆகிய மூவரும் கடந்த சில தினங்களாக காணவில்லை எனக்கூறி 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் நேற்று (ஆகஸ்ட் 21) சுத்தமல்லி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
மேலும், அதே பகுதியைச் சேர்ந்த ரிஷிகேஷ், தங்கவேலு, செல்லத்துரை உள்ளிட்டோர் சேர்ந்து பவானி உள்பட மூவரை கொலை செய்துவிட்டனர் என்றும் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்தார்.
அவர், ஒரு மணி நேரம் காவலர்களிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையில், இவ்வழக்கில் சந்தேகத்தின் பேரில் ரிஷிகேஷ், தங்கவேலு, செல்லத்துரை ஆகிய மூவரையும் காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்தனர். பின்னர் மூவரும் காவல்துறையினரின் பாதுகாப்பில் பாளையங்கோட்டை காவல் நிலையம் அனுப்பி வைக்கப்பட்டனர்.