திருநெல்வேலி:வீரவநல்லூர் அருகேயுள்ள வெள்ளங்குளியைச் சேர்ந்த கணபதியின் மகன் ஆறுமுகம் (48). இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாடு மேய்ப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆறுமுகம், வெள்ளாங்குளியில் நின்றுகொண்டிருந்தபோது அங்கு வந்த கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.