நெல்லை மாநகரப் பகுதிகளில் பெரும்பாலான சாலைகள் ஆக்கிரமிப்புகள் நிறைந்ததாகவே உள்ளது. அரசியல் செல்வாக்கு காரணமாக ஆக்கிரமிப்பது தொடர் கதையாகவே உள்ளது.
மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு உள்ளதாக புகார் எழுந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் இன்று மேலப்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக நெடுஞ்சாலைத்துறை சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியினை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மேற்கொண்டனர்.
அப்போது சாலைகள் மற்றும் நடைபாதைகளில் உள்ள கடைகள் மற்றும் வெளியே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மேலும் அகற்றப்பட்ட பொருட்களை மாநகராட்சி வாகனத்தில் எடுத்துச்சென்றனர். வியாபாரிகளுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற இரண்டு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.
நெல்லையில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம் கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும்; அதுபோல கைப்பற்றப்பட்ட பொருட்களை அதிகாரிகள் வியாபாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஏற்கெனவே நெல்லையில் வண்ணாரப்பேட்டை மற்றும் டவுன் ஆகியப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டது. குறிப்பாக மாநகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பேற்ற சிவ கிருஷ்ணமூர்த்தி ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இதையும் படிங்க:நெல்லை அருகே வம்பிழுத்த காமெடி நடிகர்: கார் கண்ணாடி உடைப்பு