கரோனா தொற்று பரவலைக் கட்டுபடுத்தும்விதமாக ஊரடங்கு உத்தரவு மே 3 வரை மத்திய அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 20 முதல் ஊரடங்கு உத்தரவு சில கட்டுப்பாடுகளுடன் தளர்வுசெய்யப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்திருந்தன.
அதன்படி பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அந்த அடிப்படையில் இன்று (திங்கள்கிழமை) நெல்லை மாவட்டத்தில் உள்ள 14 பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. அதில் 33 விழுக்காடு பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காலை முதல் மாலைவரை பரபரப்பாகக் காணப்படும் நெல்லை மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகங்கள் பொதுமக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. வழக்கமாகப் பத்திரப்பதிவு செய்வதற்கு முன்பதிவு செய்து டோக்கன் வழங்கப்படும்.