நெல்லை மாவட்டம் பொன்னாகுடி அருகே வேன் ஒன்று நான்கு வழிச்சாலையில் வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையின் சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர்.
சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த வேன்- 2 பேர் சாவு
நெல்லை: பொன்னாகுடி அருகே வேன் ஒன்று நான்கு வழிச்சாலையின் சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த மூன்றடைப்பு காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், வேனில் பயணித்தவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம், களியக்காவிளை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதும், கடலுாரில் நடக்கும் கிறிஸ்தவ சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகச் சென்றுக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது.