தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுமணத் தம்பதிகளை பிரித்த கரோனா - நெல்லை புதுமணத் தம்பதிகளுக்கு கரோனோ

திருநெல்வேலி : திருமணமாகி சில மணி நேரங்களிலேயே பெங்களூரில் இருந்து வந்த மணமகனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டார்.

Corono, who separated a newlywed couple near nellai
Corono, who separated a newlywed couple near nellai

By

Published : Jul 3, 2020, 1:23 PM IST

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம், சுப்ரமணியபுரம் பகுதியில் நேற்று திருமணம் ஒன்று நடைபெற்றது. திருமணத்திற்காக பெங்களூரு ஐடி கம்பெனியில் வேலை செய்து வரும் மணமகன், மணமகளின் சொந்த ஊரான அம்பாசமுத்திரத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் வந்தடைந்துள்ளார்.

தொடர்ந்து, அவர்கள் அனைவருக்கும் அம்பை அரசு மருத்துவமனையில் சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கிடையே ஏற்கனவே நிச்சயித்தபடி நேற்று காலை இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பிற்பகலில் வந்த பரிசோதனை முடிவில் மணமகன், அவரது தாயார், தகப்பனார், அக்காள் மகள் என நான்கு பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

சுகாதார அலுவலர்கள் மூலம் மணமகன் குடும்பத்தாரிடம் முடிவுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட நிலையில், திருமணம் முடிந்த கையோடு மணமகள் உள்ளிட்ட அனைவரிடமும் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு நான்கு பேரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

திருமணமான சில மணி நேரங்களிலேயே மணமகளை விட்டு சிகிச்சைக்காக மணமகன் மருத்துவமனைக்கு சென்றது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

ABOUT THE AUTHOR

...view details