தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 33 மாவட்டங்கள் இருந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியை தனி மாவட்டமாக பிரிக்கக் கோரி நீண்ட வருடங்களாக அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துவந்தனர். தென்காசி தற்போது முதல் நிலை நகராட்சியாக உள்ளது.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் விதி எண் 110இன் கீழ் தென்காசி, செங்கல்பட்டைத் தலைமையிடமாகக் கொண்டு புதியதாக இரு மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது.
தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக வெளியான அறிவிப்பினைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
மேலும் தொழில்துறை சுற்றுலாத்துறை மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் ஒவ்வொரு சிறு வேலைகளுக்கும் திருநெல்வேலி சென்று வந்த நிலையில் தென்காசியை மாவட்டமாக அறிவித்தது மிகுந்த மகிழ்ச்சியையும் தங்களுக்கு நேர விரயத்தை குறைக்கும் என்றும் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் புதிய மாவட்டம்; மக்கள் மகிழ்ச்சி உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தவேண்டும் என்றும் தென்காசி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.