தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடியேற்றத்துடன் தொடங்கிய நெல்லையப்பர் கோயில் திருவிழா... - Nelliappar Temple Festival started with Flag.

திருநெல்வேலி: பிரசித்திப்பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.

நெல்லையப்பர் கோயில்

By

Published : Aug 29, 2019, 7:17 PM IST

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்திப்பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆவணி மூலத் திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. இன்று தொடங்கி 11ஆம் தேதி வரை இத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

முன்னதாக கொடிபட்டம் வீதி உலா நடைபெற்றது. பின்னர் கொடி மரியாதைகள் செய்யப்பட்டு காலை 7.30 - 9.00 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. அலங்காரம் செய்யப்பட்ட கொடி மரத்திற்கு தீபாரதனையும் நடைபெற்றது.

கொடியேற்றத்துடன் தொடங்கிய நெல்லையப்பர் கோயில் திருவிழா...

மேலும், வருகின்ற 1ஆம் தேதி அன்று ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலாவும், திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியான கருவூர் சித்தருக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி அளிக்கின்ற நிகழ்வு வரும் 8ஆம் தேதி ஆவணி மூலத்தன்று நடைபெறவுள்ளது. திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details