தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும்விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.
நெல்லையப்பர் கோயில் மார்ச் 31ஆம் தேதிவரை மூடப்படும்
திருநெல்வேலி: பிரசித்திப் பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில் கரோனா காரணமாக மார்ச் 31ஆம் தேதிவரை மூடப்படும் எனக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், மாநிலத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களில் பக்தர்கள் வரத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கோயில்கள் மூடப்பட்டுவருகின்றன. அதன்படி, பிரசித்திப் பெற்ற திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில் மார்ச் 31ஆம் தேதிவரை மூடப்படும் எனக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தினமும் அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் முயற்சி - நெல்லையப்பர் கோயிலில் கிருமி நாசினி தெளிப்பு