தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்வீட் கடையை அரிவாளால் சூறையாடிய இளைஞர் - நெல்லை டவுனில் பரபரப்பு - நெல்லை போலீசார்

நெல்லை நகர் பகுதியில் உள்ள ஸ்வீட் ஸ்டாலை அரிவாளால் சூறையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 8, 2023, 3:24 PM IST

ஸ்வீட் கடையை அரிவாளால் சூறையாடிய இளைஞர் - நெல்லை டவுனில் பரபரப்பு

நெல்லை:நெல்லை நகரில் சாலியர் தெரு பகுதியைச் சேர்ந்தவர், தங்கராஜ். இவர் அப்பகுதியில் சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக ஸ்வீட் ஸ்டால் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று (பிப்.7) நள்ளிரவு கடையடைக்கும் நேரத்தில் சாலியர் தெரு பகுதியில் நடந்து சென்ற ஒரு இளைஞர், சுமார் மூன்று அடி உயரம் கொண்ட அரிவாளை வைத்து தங்கராஜ் கடையில் முன் பகுதியில் இருந்த பலகாரங்கள் வைத்திருந்த பாட்டில் மற்றும் கண்ணாடி அலமாரிகளை சரமாரியாக அடித்து நொறுக்கினார்.

அத்துடன் கடையின் ஊழியர்களையும் அரிவாளால் மிரட்டல் விடுத்துச் சென்றார். இதனைத்தொடர்ந்து அங்கிருந்த ஊழியர்கள் கடையில் இருந்து தப்பி வெளியே வந்து நெல்லை டவுன் போலீசாருக்கு இந்தச் சம்பவம் குறித்து தகவல் அளித்துள்ளனர். இது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நெல்லை நகரில் இவ்வாறு ஸ்வீட் ஸ்டாலில் மர்ம நபர் அரிவாளால் பாட்டில்களை வெட்டிக் கடை ஊழியர்களையும் மிரட்டல் விடுத்துச் சென்றது அப்பகுதியில் உள்ளவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடை அடைக்கும் நேரத்தில் சாலையில் நடந்து சென்ற மர்ம நபர் கடையில் உள்ள பொருட்களை உடைத்து நொறுக்கிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இதையும் படிங்க: "இது ரோடு இல்லை ரோடு மாதிரி.." விமர்சனத்திற்கு ஆளான வீடூர் புதிய சாலை!

ABOUT THE AUTHOR

...view details