தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லை - சென்னை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் - தென்னக ரயில்வே தகவல் - வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

100 கோடிக்கு மேல் வருவாய் தந்த திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் விமான நிலையத்திற்கு இணையாக உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றப்படும் என்று தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் ஆர்.என் சிங் தகவல் தெரிவித்துள்ளார்

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் விமான நிலையத்திற்கு இணையாக உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றப்படும் என்று தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் ஆர் என் சிங் தகவல் தெரிவித்துள்ளார்
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் விமான நிலையத்திற்கு இணையாக உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றப்படும் என்று தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் ஆர் என் சிங் தகவல் தெரிவித்துள்ளார்

By

Published : Jul 6, 2023, 8:02 AM IST

திருநெல்வேலி: தெற்கு ரயில்வே கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களின் வருவாய் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்பான அறிக்கையைத் தென்னக ரயில்வே ஏற்கனவே வெளியிட்ட நிலையில், திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் (Nellai express) ரயில் 28வது இடத்தைப் பிடித்தது. சென்னையிலிருந்து மறுமார்க்கமாக புறப்பட்டு நெல்லை வரும் அதே நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் 29வது இடத்தையும் என அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது.

இரு மார்க்கங்களிலும் சேர்த்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் நான்கு மாத காலங்களில் மட்டும் 3 லட்சத்து 32 ஆயிரத்து 884 பேர் பயணம் செய்துள்ளனர். அதற்கான வருவாயாக 23 கோடியே 35 லட்சத்து 33 ஆயிரத்து 997 ரூபாய் கிடைத்துள்ளது. மேலும், தென் மாவட்டங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குள் இயக்கப்படும் ரயில்களில் வருவாய் ஈட்டுவதில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் முதல் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ரயில்களின் வருவாய் 100 கோடி முதல் 500 கோடி ரூபாய் வரை வருவாய் இருந்தால் ‘என்எஸ்ஜி - 2’ ரயில் நிலையம் என வரைமுறைப்படுத்தப்படும். ஏற்கனவே, நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் என்எஸ்ஜி - 3 நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆகையால், நெல்லை ரயில் நிலையம் என்எஸ்ஜி - 3 நிலையில் இருந்து என்எஸ்ஜி - 2 ரயில் நிலையமாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என ரயில்வே பயணிகள் ஆலோசனை குழு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த நிலையில், நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் ஆர்.என் சிங் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தென்னக ரயில்வேயில் பல்வேறு கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருநெல்வேலியில் இருந்து நாகர்கோயில் வரை செல்லும் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்த உடன் கூடுதல் ரயில்கள் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும்.” என கூறினார்.

மேலும் பேசிய அவர், “திருநெல்வேலி - சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இயக்கப்படலாம்” எனத் தெரிவித்தார். 100 கோடி ரூபாய்க்கு மேலான வருவாய் தந்துள்ள திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் முறையாக இல்லாதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என் சிங், “திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விமான நிலையத்திற்கு இணையாக உலகத்தரம் வாய்ந்த அளவில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் மறுகட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும். அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மத்திய ரயில்வே துறைக்கு அறிக்கை அனுப்பப்படும். மேலும், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் கூடுதலாக நடைமேடைகள் ஏற்படுத்தப்படும். நான்கு ஆண்டுகளுக்குள் இந்த பணிகள் முடிவடையும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:Thulukkarpatti Excavation:ஈராயிரம் ஆண்டுக்கு முன்னரே எழுத்தறிவு.. புதையல்களை அள்ளித்தரும் துலுக்கர்பட்டி!

ABOUT THE AUTHOR

...view details