திருநெல்வேலி: பொருட்காட்சி திடல் அருகே உள்ள சாஃப்டர் அரசு உதவிபெறும் பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
பள்ளி கழிவறை சுவர் இடிந்து விபத்து - 3 மாணவர்கள் உயிரிழப்பு - தனியார் பள்ளி கழிவறை சுவர் இடிந்து விபத்து
11:46 December 17
திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த இரண்டு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் மீட்பு படையினர், மீட்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
விபத்து குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் பள்ளி முன் திரண்டதால் பரபரப்பு நிலவியது. அவர்களை காவல் துறையினர் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் செந்தாமரை கண்ணன், உயர் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.