நெல்லை மாவட்டம் மானூரில் குற்றங்களைத் தடுக்கும்விதமாக 85 சிசிடிவி கேமராக்களும், 50 பேரிகார்டுகளும் அமைப்பதற்கான திறப்பு விழா நடைபெற்றது.
நெல்லை சரக காவல்துறை டிஐஜி பிரவின்குமார் அபினபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று சிசிடிவி கேமராக்கள் செயல்பாட்டினை தொடங்கிவைத்தனர்.
விழாவில் டிஐஜி பேசுகையில், “ஒரு சிசிடிவி கேமரா 4 காவலர்களுக்கு சமம். எனவே, உங்கள் ஊரில் 340 காவலர்களை நீங்களே நியமித்துள்ளீர்கள். இதன்மூலம் குற்றங்களைக் குறைக்க முடியும். காவல்துறையில் மட்டுமல்லாமல் பல்வேறு வேலைவாய்ப்புகள் இளைஞர்களுக்கு உள்ளது.
உதாரணமாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பல்வேறு தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காகப் பயிற்சி நாள்களில் தினமும் 100 ரூபாய் பணமும் தருகிறார்கள். எனவே இளைஞர்கள் இந்தத் திறன் மேம்பாட்டு பயிற்சியைப் பெற்று வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்
தொடர்ந்து சீவலப்பேரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய சிசிடிவி கேமராக்கள் மற்றும் புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் திறந்துவைத்தார்.