திருநெல்வேலி: அடைமிதிப்பான்குளம் கிராமத்தில் திசையன்விளையைச்சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரும் தொழிலதிபருமான சேம்பர் செல்வராஜ் அவரது மகன் குமார் ஆகியோருக்குச் சொந்தமான கல் குவாரி இயங்கி வருகிறது. இந்த கல் குவாரியில் கடந்த 14ஆம் தேதி இரவு பாறைகள் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், அப்பாவித்தொழிலாளர்கள் 3 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள லாரி டிரைவர் ராஜேந்திரனை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த கல்குவாரியில் பல்வேறு விதிமீறல்கள் நடந்திருப்பது தெரியவந்தது. எனவே, குவாரி உரிமையாளர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
ஆனால், விபத்து நடைபெற்ற அன்றே உரிமையாளர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். இதுகுறித்து முன்னீர்பள்ளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குவாரி உரிமைதாரரான சங்கர நாராயணன் மற்றும் மேலாளர் ஆகிய இருவரை மட்டும் கைது செய்தனர்.