மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு(நீட்) நாடு முழுவதும் நாளை (செப்டம்பர் 12) நடைபெறவுள்ளது. கரோனா தொற்றால் இந்த ஆண்டு இத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்தன.
நீட் விவகாரம் - மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டம்
திருநெல்வேலி : நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மனிதநேய மக்கள் கட்சியினர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போரட்டம் நடத்தினர்.
ஆனால், திட்டமிட்டபடி நாளை தேர்வு நடைபெறும் சூழலில் நீட் தேர்வு பயத்தால் இன்று (செப்.12) மதுரையில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்த நிலையில் நீட் தேர்வு ரத்து செய்ய கோரி நெல்லை மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கைகளில் கொடியை ஏந்தியபடி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.