நெல்லை மாநகர காவல்துறையினர் மீம்ஸ்கள் மூலம் தலைக்கவசம் அணிவதன் அவசியம், ஏடிஎம் பாஸ்வேர்டைப் பாதுகாப்பது, பெண்களின் பாதுகாப்பு என ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களின் மூலம் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
அதுபோல முதியவர்களை பாதுகாக்க ஒரு புதிய திட்டம் ஒன்றையும் மாநகர காவல்துறை தொடங்கி உள்ளது. குறிப்பாக வீட்டில் தனியாக இருக்கும் முதியோர்கள் மற்றும் மூத்த குடிமக்களின் பாதுகாப்புக்காக உதவும் வகையில் 'வேர்களைத் தேடி' என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தினை நெல்லை மாநகர காவல் ஆணையாளர் (பொறுப்பு) பிரவீன் குமார் அபிநபு காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தொடங்கி வைத்தார் .
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " இந்தத் திட்டத்தின் நோக்கமாக மாநகரப் பகுதிகளில் வீட்டில் தனியாக இருக்கும் மூத்த குடிமக்களின் வீடுகளை கணக்கெடுத்து, அவர்களது வீட்டில் வேர்களைத் தேடி என்ற பட்டா புத்தகம் வைக்கப்படும்.