கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் தூய்மைப் பணியாளர்களும், மருத்துவப் பணியாளர்களும் அயராது உழைத்துவருகின்றனர்.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் சுகாதாரப் பணிகள் மேற்கொண்டுவரும் தூய்மைப் பணியாளர்களையும், மாநகராட்சி ஊழியர்களையும் கௌரவிக்கும் விதமாக காவல் துறையினரின் மரியாதை காப்பு அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.