திருநெல்வேலி:கரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு குறைந்தவருகிறது. வரும் 13ஆம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் தொடங்க உள்ளன. இதனால் மருத்துவத் துறை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கலாம் என்று அரசு அனுமதி வழங்கியது.
கடந்த வாரம் 16ஆம் தேதி நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின. இந்நிலையில் முதலாம் ஆண்டு மாணவி ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து மருத்துவக் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மேலும் மூன்று மாணவிகளுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.