தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வட மாநிலத் தொழிலாளர்கள் 40 பேருக்கு கரோனா!

திருநெல்வேலி: இஸ்ரோ மையத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் 40 பேருக்கு ஒரே நேரத்தில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

nellai isro corona case
nellai isro corona case

By

Published : Apr 18, 2021, 12:15 PM IST

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் சூழ்நிலையில் புதிதாக 277 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாநகரப் பகுதிகளில் மட்டும் 147 பேருக்கும், புறநகர்ப் பகுதிகளில் 130 பேருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதுவரை 1,684 பேர் வீடு, மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் இதுவரை 18 ஆயிரத்து 345 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் செயல்பட்டுவரும் இஸ்ரோ மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் வட மாநிலத் தொழிலாளர்கள் 40 பேருக்கு ஒரே நேரத்தில் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட 40 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இதையும் படிங்க: 'மயிலாடுதுறைக்கு 1 லட்சம் தடுப்பூசிகள் தேவை'

ABOUT THE AUTHOR

...view details