நெல்லை: வண்ணாரப்பேட்டையில் உள்ள மூன்று நட்சத்திர விடுதியுடன் கூடிய உணவகத்தில் நெல்லையின் பிரபல பேக்கரி நிறுவனமான "ஆர்யாஸ் நிறுவனத்தின்" முப்பெரும் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. இதில் 100 மில்லி கிராம் எடை கொண்ட தங்கத்தாள் கொண்டு நான்கு அடி நீளத்தில் உலகிலேயே அதிக விலை கொண்ட தங்கத் தோசை தயாரிக்கப்பட்டு 20,230 விலையும் நிர்ணயம் செய்யப்பட்டது.
அதேபோல் 250 மில்லி கிராம் தங்கத்தாள் கொண்டு 5 கிலோ எடையுடைய உலகின் மிகப்பெரிய அளவிலான சாக்லேட் பார் தயாரிக்கப்பட்டு அதற்கு விலையாக ஒரு லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது.
400 மில்லி கிராம் தங்கத்தாள் கொண்டு 100 கிலோ எடையில் உலகிலேயே மிகப்பெரிய அளவிலான ரிச் பிளம் கேக் தயாரிக்கப்பட்டு அதற்கு ரூ.2.60 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பிரம்மாண்ட கண்ணாடி பேழையில் காட்சிப்படுத்தியது.
இதனை "அசிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட்" நிறுவனம் சார்பில் வந்த அதிகாரிகள் ஆய்வு செய்து உலக சாதனையை அங்கீகரித்து அந்த முயற்சிக்கான சான்றிதழ்கள் மற்றும் கேடயத்தினை ஆர்யாஸ் நிறுவன உரிமையாளரிடம் வழங்கினர்.