தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொரோனா வைரஸ் பாதிப்பு : 24x7 தயார் நிலையில் இருக்கும் நெல்லை அரசு மருத்துவமனை! - 24x7 தயார் நிலையில் இருக்கும் நெல்லை அரசு மருத்துவமனை

திருநெல்வேலி : கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வரும் பொதுமக்களுக்கு உதவிச் செய்ய மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய அவசர சிகிச்சை குழு 24 மணி நேரமும் தயாராக இருக்கும் என திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

nellai government hospital ready to fight against corona virus
கொரானா வைரஸ் பாதிப்பு : 24x7 தயார் நிலையில் இருக்கும் நெல்லை அரசு மருத்துவமனை!

By

Published : Mar 6, 2020, 11:06 PM IST

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு செய்யப்பட்டுள்ள அறுவை சிகிச்சை குறித்து அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய அவர் , ”திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 55 வயது மதிக்கத்தக்க நோயாளிக்கு ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. பைபாஸ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.

மேலும் தனியார் மருத்துவமனையில் 2 லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய்வரை செலவாகும் இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை, இருதய கோளாறு அறுவை சிகிச்சை போன்ற அறுவை சிகிச்சைகள் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக இருதயத் துறை, மயக்கவியல் துறை உதவியுடன் அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்யப்படுகிறது.

கொரானா வைரஸ் பாதிப்பு : 24x7 தயார் நிலையில் இருக்கும் நெல்லை அரசு மருத்துவமனை!

கொரோனா சிகிச்சைக்காக எட்டு படுக்கைகள் கொண்ட வசதியுடன் தனி வார்டு உள்ளது. சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் உபகரணங்கள் கையிருப்பில் உள்ளது. தொடர்ந்து சிகிச்சைக்காக 24 மணி நேரமும் மருத்துவர்கள் செவிலியர்கள் அடங்கிய அவசர சிகிச்சைக்கு குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை எந்த நோயாளியும் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்படவில்லை” என்றார்.

இதையும் படிங்க :பெண்ணிடம் அவதூறாகப் பேசிய நகராட்சிப் பணியாளர் - புகாரளித்த பாதிக்கப்பட்ட பெண்

ABOUT THE AUTHOR

...view details