திருநெல்வேலிமாவட்டம் திசையன்விளை லட்சுமி நகரைச் சேர்ந்த 14 வயது மாணவி திசையன்விளை உடன்குடி ரோட்டில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா தபோவனம் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார்.
மாணவி தேர்வு எழுதும்போது அறையின் பொறுப்பு ஆசிரியரும், வகுப்பு ஆசிரியரும் மாணவர்கள் மத்தியில் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்த மாணவி மாணவர்களுக்கு மத்தியில் ஆசிரியர் திட்டியதால் தான் அவமானப்பட்டதை தனது தாயிடம் சொல்லி அழுது "இனிமேல் பள்ளிக்கு போகமாட்டேன்" எனக் கூறியதாக தெரிகிறது.
இந்த நிலையில், மாணவியின் தாய் கலா, மாணவியை சமாதானப் படுத்தியதாகவும் தெரிகிறது. மாணவியின் தந்தை வேலைக்கு சென்றுள்ளார். மாணவியின் அண்ணன் டியூசன் சென்றுள்ளார். அப்போது, மாணவியின் தாய் பக்கத்து வீட்டில் பேசிக்கொண்டிருந்துள்ளார்.