தென்காசி:கடையம் அருகே பெத்தான்பிள்ளை குடியிருப்பை சேர்ந்த மசாலா வியாபாரி வைகுண்டமணி, விவசாயிகள் சைலப்பன், நாகேந்திரன் ஆகியோரை கடந்த 6ஆம் தேதி பெண் கரடி கடித்துக் குதறியது. இதில் சைலப்பன், நாகேந்திரன் இருவருக்கும் முகம் மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டனர். இருவருக்கும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது.
இந்த நிலையில் உயிரிழந்த கரடிக்கு ரேபிஸ் நோய் இருந்தது பரிசோதனையில் தெரிய வந்தது. எனவே கரடியை கையாண்ட வனத்துறையினர் மற்றும் பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.
கரடி தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள மூன்று பேருக்கும் ரேபிஸ் பாதிப்பு இருக்குமோ என்ற அச்சம் எழுந்தது. இதனிடையே சிகிச்சை பெற்று வரும் நாகேந்திரனுக்கு மூச்சுத் திணறல் அதிகமானதால் சந்தேகம் அதிகரித்தது.