திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர், பணிப்பெண் ஆகிய மூவர் அடையாளம் தெரியாத நபர்களால் கடந்த ஜூலை மாதம் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லை மேயர் கொலை வழக்கு: மேலும் இருவர் கைது!
திருநெல்வேலி: நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் திமுக பெண் பிரமுகர் சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி ஆகியோரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்தனர்.
இதனையடுத்து, மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையில், மூன்று தனிப்படைகள் அமைத்து இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, ரெட்டியார்பட்டி பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை தனிப்படையினர் ஆய்வு செய்தனர். அதில், கொலை நடைபெற்ற நேரத்தில் அந்தப் பகுதி வழியாக இளைஞர்கள் இருவர் சந்தேகப்படும் வகையில் நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அவர்கள் யார், எதற்காக அங்கு வந்தனர் என்பது குறித்த விசாரணையை தனிப்படையினர் மேற்கொண்டனர்.
விசாரணையில், ஒருவர் மதுரையைச் சேர்ந்த திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் என்பது தெரியவந்தது. பின்னர், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த திமுக பிரமுகர் சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி ஆகியோரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.