தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருநெல்வேலியில் கரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் - corona update

திருநெல்வேலி: தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிற நிலையில், திருநெல்வேலியில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 1107 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

nellai-corona-case-reaches-new-record
திருநெல்வேலியில் கரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்து புதிய உச்சம்

By

Published : May 9, 2021, 2:58 PM IST

நெல்லையில் தினமும் சராசரியாக 600 முதல் 700 பேர்வரை கரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று (மே 8) புதிய உச்சமாக மாவட்டம் முழுவதும் 1107 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மொத்தம் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 30,972ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பலனின்றி 263 பேர் உயிரிழந்துள்ளனர். வீடு மற்றும் மருத்துவமனைகளில் 3,600 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

கடந்த சில நாள்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில் புதிய உச்சமாக ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கரோனா பரவல்: வார் ரூமிற்கு 6 ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் நியமனம்!

ABOUT THE AUTHOR

...view details