தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லை அமமுக மாவட்ட செயலாளர் திமுகவில் இணைந்தார் - ttv dhinakaran

நெல்லை கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செயலாளர் பரமசிவன் ஐயப்பன் இன்று திமுக பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரனை நேரில் சந்தித்து திமுகவில் இணைந்தார்.

நெல்லை அமமுக மாவட்ட செயலாளர் திமுகவில் இணைந்தார்
நெல்லை அமமுக மாவட்ட செயலாளர் திமுகவில் இணைந்தார்

By

Published : Jun 19, 2021, 12:01 PM IST

திருநெல்வேலி: நெல்லை கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செயலாளராக இருந்தவர் பரமசிவன் ஐயப்பன். இவர் இன்று திமுக பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரனை நேரில் சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பரமசிவன் ஐயப்பன் அமமுக சார்பில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

முன்னதாக தனக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு வழங்கப்படாத அதிருப்தியில் தேர்தல் சமயத்தில் பரமசிவன் ஐயப்பன் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. அதன்பிறகே அவருக்கு நாங்குநேரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. தேர்தல் தோல்விக்குப் பிறகு தற்போது பரமசிவன் ஐயப்பன் திமுகவில் இணைந்துள்ளார்.

இதையும் படிங்க:நடிகர் ரஜினிகாந்த் மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா பயணம்

ABOUT THE AUTHOR

...view details