தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பதவிப் போனால் என்ன? சசிகலாவுக்காக உயிரையும் கொடுப்பேன்'- நெல்லை அதிமுக நிர்வாகி - சசிகலா

கட்சிப் பதவி போனால் என்ன? சசிகலாவுக்காக உயிரையும் கொடுப்பேன் என சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய நெல்லை அதிமுக நிர்வாகி தெரிவித்துள்ளார்.

nellai-admk-member-spoke-to-sasikala
'பதவி போனால் என்ன? சசிகலாவுகாக உயிரையும் கொடுப்பேன்'- நெல்லை அதிமுக நிர்வாகி

By

Published : Jun 4, 2021, 10:48 PM IST

திருநெல்வேலி:தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு சில வாரங்களுக்கு முன்பு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, அதிமுக கட்சியை கைப்பற்றுவார் என்று அவரது ஆதரவாளர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த வேலையில், அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு, அவரது ஆதரவாளர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.

இந்தச்சூழ்நிலையில், கடந்த சிலநாட்களாக, சசிகலா அதிமுக தொண்டர்கள் சிலரிடம் செல்போனில் பேசும் ஆடியோ தொடர்ச்சியாக வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. தற்போது, நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் பகுதி அதிமுக மாணவரணி இணைச்செயலாளர் சுந்தர்ராஜ் என்பவரிடம் சசிகலா தொலைபேசியில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் உலாவருகிறது.

ஆதரவாளரிடம் பேசும் சசிகலா

அந்த ஆடியோவில், சுந்தர்ராஜ் ஒன்றரைக் கோடி தொண்டர்களுக்கும் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் எனக்கூறுவதும், அதற்கு கவலைப்படாதீர்கள், தொண்டர்களை நான் அப்படியெல்லாம் விட்டுவிடமாட்டேன் நிச்சயம் வருவேன், எல்லாவற்றையும் சரி செய்துவிடலாம் என சசிகலா கூறுவதும் பதிவாகியிருக்கிறது. மேலும், அந்த ஆடியோவில், ஜெயலலிதா இருந்தபோது எப்படி கட்சி இருந்ததோ அதுபோல் கொண்டுவந்துவிடுவேன் எனப் பேசியிருப்பதும் பதிவாகியுள்ளது.

இந்த ஆடியோ நெல்லை மாவட்ட அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில், இந்த ஆடியோ தொடர்பாக சுந்தர்ராஜிடம் நாம் கேட்டபோது, அவர் பேசியதில் எல்லையற்ற மகிழ்ச்சி எனவும், கட்சிப்பதவி போனால் என்ன அவருக்காக உயிரையே கொடுப்பேன் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:அடுத்த இன்னிங்ஸை தொடங்குகிறார் சசிகலா? வைரல் ஆடியோ!

ABOUT THE AUTHOR

...view details