திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகே திருநெல்வேலி நெடுஞ்சாலையில் ஆம்னி வேன் ஒன்று முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தில் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆம்னி வேனில் இருந்த நபர் படுகாயமடைந்தார்.
இருசக்கர வாகனம் மீது ஆம்னி வேன் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு - நெல்லை மாவட்ட செய்திகள்
திருநெல்வேலி: இருசக்கர வாகனம் மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில், இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, தாழையூத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஆம்னி வேனை ஓட்டி வந்தது திருச்சியைச் சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது.
மேலும், விபத்தில் உயிரிழந்தவர் திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பது விசாரணையில் தெரியவந்தது.