தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 13, 2020, 4:57 PM IST

ETV Bharat / state

நெல்லையில் நீட் தேர்வு மையங்கள்; 7460 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்

திருநெல்வேலி: நெல்லையில் தற்போது நடைபெற்று வரும் மருத்துவ நுழைவுத் தேர்வை 7,460 மாணவர்கள் எழுதுகின்றனர்.

neet-selection-centers-in-nellai-7460-students-write-the-exam
neet-selection-centers-in-nellai-7460-students-write-the-exam

மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு (நீட்) இன்று (செப்டம்பர் 13) நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்த நிலையில், தமிழ்நாட்டில் நேற்று (செப்டம்பர் 12) ஒரே நாளில் நீட் தேர்வு அச்சம் காரணமாக மூன்று மாணவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது போன்ற பரபரப்பான சூழலில் திட்டமிட்டபடி இன்று நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் 17 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. முன்னதாக, தேர்வு மையங்களில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, கிருமி நாசினி தெளிப்பது, தேர்வு அறை தயார் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதேபோல் மாணவர்கள் தகுந்த இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டமிடப்பட்ட வழிப்பாதைகள் ஏற்படுத்தப்பட்டு, தேர்வு குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் அடங்கிய பேனர்களும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன.

நெல்லையில் நீட் தேர்வு மையங்கள்

காலை 11:40 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மட்டுமே மாணவர்கள் தேர்வு மையத்திற்குள், அனுமதிக்கப்பட்டனர். அதேசமயம் கரோனா அறிகுறிகள் உள்ளவர்களுக்கு தனி தேர்வு அறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:'சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை' - மகேஷ்குமார் அகர்வால்!

ABOUT THE AUTHOR

...view details