தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘வளர்ச்சி திட்டங்களை ஆளுநர் கிரண் பேடி தடுக்கிறார்’ - முதலமைச்சர் நாராயணசாமி - கிரன் பேடி குறித்து பேசிய நாராயணசாமி

திருநெல்வேலி: ஆளுநர் கிரண் பேடி மாநிலத்தின் அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் தடுத்து வருவதாக முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி
செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி

By

Published : Mar 8, 2020, 3:07 PM IST

தேசிய குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி திருநெல்வேலிக்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது:-

“புதுச்சேரியின் அனைத்து நலத்திட்டங்களையும் ஆளுநர் கிரண் பேடி தடுத்து வருகிறார். காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து செயல்படுத்தும் திட்டத்தை அவர் தடுத்து நிறுத்தி இருக்கிறார்.

ஆளுநர் எங்களோடு இணைந்து செயல்பட்டால் புதுச்சேரியை பொன் கொழிக்கும் மாநிலமாக மாற்ற முடியும். ஆனால் ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார்.

செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி

பல்வேறு இடையூறுகளை ஆளுநர் எங்களுக்கு கொடுத்தாலும் அனைத்தையும் தாண்டி 17 சிறிய மாநிலங்களில் முதன்மை மாநிலமாக புதுச்சேரி செயல்பட்டு வருகிறது. புதுச்சேரியில் எங்களுக்கு எதிர்க்கட்சிகளே இல்லை, கிரண் பேடி தான் எங்களுக்கு எதிர்க்கட்சியாக உள்ளார்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டு மக்களுக்காகச் சிறப்பாகப் பணியாற்றியவர் க. அன்பழகன்' - நாராயணசாமி

ABOUT THE AUTHOR

...view details