நாங்குநேரி இடைத்தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தமிழ்நாடு அமைச்சர்கள் நாங்குநேரி தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர். பொன்னாக்குடி, செங்குளம் பகுதியில் தேர்தல் வேலைகளை கவனித்து வரும் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது, காங்கிரஸ் வேட்பாளர் இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர் என்றும் உண்மையான தொண்டனுக்கு மதிப்பளிக்கும் கட்சியாக காங்கிரஸ் இருந்திருந்தால் அடிமட்டத் தொண்டனை வேட்பாளராக நிறுத்தி இருக்கும், இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளரை நிறுத்தி இருக்காது எனவும் கடுமையாக விமர்சித்து பேசினார்.
தொடர்ந்து பேசுகையில், அதிமுக, திமுக கட்சிகளின் தோள்களில் ஏறி சவாரி செய்யும் காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரிக்கு வீராப்புத் தேவையில்லை. பணக்காரர்களை நிறுத்திவிட்டு அமைச்சர்கள் தகுதி திறமை பற்றி பேச வேண்டியதில்லை, அவர்தான் கூமுட்டை தமிழக அமைச்சர்கள் மக்களோடு மக்களாக பணியாற்றி வருகின்றனர். நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியை டெபாசிட் இழக்கச் செய்வோம் எனக் கூறினார்.
மேலும், தேர்தல் சமயத்தில் மட்டும் வருவதாகக் கனிமொழி கூறுவது தவறு. திமுக ஆட்சிக்காலத்தில் கூட்டுறவுத்துறையில் இரண்டு முறை மட்டுமே விருதுகள் கிடைத்தது. தற்போது கடந்த 9 ஆண்டுகளில் 27 முறை கூட்டுறவுத் துறைக்கு விருது கிடைத்துள்ளது. எனவே யாருடைய ஆட்சி சிறப்பானது என்பதை கனிமொழி புரிந்து கொள்ள வேண்டும். மேலும் ஸ்டாலின் கனிமொழியை ஒதிக்கி வைத்துள்ளார் என்று கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க : ‘பேனருக்கு தடை விதிக்கக் கூடாது’ - தனியரசு எம்எல்ஏ