தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டாலினை முதல்வராக்க நடக்கும் இடைத்தேர்தல் - திருநாவுக்கரசர் - thirunavukkarasar,

திருநெல்வேலி: நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற சட்டப்பேரவை தேர்தலுக்கும் ஸ்டாலினை முதல்வராக்குவதற்கும் நடக்கும் முன்னோட்டமான தேர்தல் என்று மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

thirunavukkarasar

By

Published : Oct 8, 2019, 8:43 AM IST

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் செப்டம்பர் 21ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துவருகிறது. திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார.

இந்நிலையில், திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர், ரூபி மனோகரனை ஆதரித்து மூலக்கரைப்பட்டியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அமைத்த கூட்டணி வலுவான கூட்டணி. இந்தத் தேர்தல் இடைத்தேர்தல் என்று கருதிவிட முடியாது.

அடுத்து வரக்கூடிய சட்டப்பேரவை தேர்தலுக்கும் ஸ்டாலினை முதலமைச்சராவதற்கும் நடக்கும் முன்னோட்டமான தேர்தல் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'மேகேதாட்டு அணை கட்ட முடியாது' - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details