தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாங்குநேரியில் 66.35 சதவிகித வாக்குப்பதிவு!

நெல்லை: நாங்குநேரி தொகுதியில் இன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் 66.35 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

nanguneri by election

By

Published : Oct 21, 2019, 11:16 PM IST

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி வேட்பாளர் வசந்தகுமார் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவித்தது. அதன்படி காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை விறுவிறுப்பாக நடைபெற்றது.

நாங்குநேரி தொகுதியில் மொத்தம் 66.35 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவிற்குப் பிறகு 299 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள அனைத்து வாக்குப் பெட்டிகளும் நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் நான்கு அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

நாங்குநேரியில் 66.35 சதவிகித வாக்குப்பதிவு

வரும் 24ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. அதுவரை வாக்கு பெட்டிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்களைக் கொண்ட அறையில் தீவிர கண்காணிக்கப்புடன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் துணை ராணுவப் படையினரும் அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

நாங்குநேரி வாக்குப்பதிவு:
ஆண்கள் 80500
பெண்கள் 90122
திருநங்கைகள் 2
மொத்தம் 170624
சதவிகிதம் 66.35%

இதையும் படிங்க: 'பொய் வழக்குப் போட்டு வெற்றியைத் தடுக்கும் காவல் துறை!' - வசந்தகுமார் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details