ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’மக்களுடன் சாதி, மதம் கடந்த பரஸ்பர உறவு’ - நயினார் நாகேந்திரன் உருக்கம்! - Nainar Nagendran of the BJP

திருநெல்வேலி: கடந்த 20 ஆண்டுகளாக மதம், சாதி என்ற எவ்வித பாகுபாடுகளும் காட்டாமல் அனைத்து தரப்பு மக்களிடமும் பரஸ்பரம் உறவு வைத்துள்ளதாக பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன், ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரனின் சிறப்பு நேர்காணல்
பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரனின் சிறப்பு நேர்காணல்
author img

By

Published : Mar 30, 2021, 1:50 PM IST

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில், அதிமுக கூட்டணியில், பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே இதே தொகுதியில் அதிமுக சார்பில் நான்கு முறை போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராகவும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் அமைச்சராகவும் பதவி வகித்தவர்.

in article image
பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன்

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவில் இருந்து விலகிய நயினார் நாகேந்திரன், பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தற்போது பாஜகவில் மாநிலத் துணைத்தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரனுக்கு திருநெல்வேலிதொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தொகுதி மக்கள் சார்பில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். அவை பின்வருமாறு:

இந்தத் தொகுதியை தேர்ந்தெடுத்ததற்கான காரணம்?

’திருநெல்வேலி தொகுதி சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட ஒரு தொகுதி. இது எம்ஜிஆர் கோட்டையாக இருந்த தொகுதி. எப்போதுமே சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட தொகுதி என்பதால் இந்தத் தொகுதியை தேர்ந்தெடுத்தேன்.

தொகுதியில் உள்ள முக்கியப் பிரச்சனையாக எதைப் பார்க்கிறீர்கள்?

திருநெல்வேலியில் ஸ்மார்ட் சிட்டி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பல இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு ஆமை வேகத்தில் பணிகள் நடந்து வருகின்றன. நான் வெற்றி பெற்றால் இந்தப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன்.

பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன்

நீங்கள் வெற்றி பெறும் பட்சத்தில் உங்களின் ஐந்து ஆண்டு கால செயல் திட்டம் என்னவாக இருக்கும்?

திருநெல்வேலியில் மிக முக்கியப் பிரச்னையாக போக்குவரத்து நெருக்கடி இருந்துவருகிறது. இது ஒரு சிறிய டவுன் ஏற்கனவே நான் எம்எல்ஏவாக இருந்தபோது இங்கே ரிங்ரோடு கொண்டுவர நடவடிக்கை எடுத்தேன். ஆனால் அந்தத் திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

குறிப்பாக மதுரையில் இருந்து வரும் வாகனங்கள் தாழையூத்தில் இருந்து குற்றாலம், செங்கோட்டை செல்ல ரிங் ரோடு அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் திருநெல்வேலியில் போக்குவரத்து நெரிசல் குறையும். அதேபோல் தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்து எல்லா இடங்களிலும் தடுப்பணை கட்டவும் திட்டம் வைத்துள்ளேன்.

ஆளும் கட்சியாக இருந்தால் எப்படி திட்டங்களை கேட்டுப் பெறுவீர்கள்? எதிர்க்கட்சியாக இருந்தால் எப்படி செயல்படுவீர்கள்?

ஆளுங்கட்சியாக இருந்தால் அமைச்சர்கள், அரசு அலுவலர்களைச் சந்தித்து, உரிய வழிமுறையில் மாவட்ட ஆட்சியரை அணுகி, மக்களுக்கான தேவையை கேட்டுப் பெறுவேன். எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதே முறையை தான் கடைப்பிடிப்பேன்.

பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன்

அடிப்படைத் தேவைகளை தாண்டி நீங்கள் செயல்படுத்த நினைக்கும் முக்கியத் திட்டம் என்னவாக இருக்கும்?

நான் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது திருநெல்வேலி தொகுதியில் 238 கோடியில் அரியநாயகிபுரம் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்ப எதிர்கால குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.

பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரனின் சிறப்பு நேர்காணல்

அரசியல் கொள்கைகளைத் தாண்டி எந்தக் காரணத்திற்காக மக்கள் உங்களுக்கு ஓட்டு போடவேண்டும்?

இந்தத் தொகுதியில் நான் இருபது ஆண்டுகளாக அனைத்து தரப்பு மக்களிடமும் இனம், சாதி, மதம் கடந்து பழகி வருகிறேன். குறிப்பாக அவர்களின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் உடனிருந்திருக்கிறேன். தொகுதி மக்களிடம் பரஸ்பரம் உறவு வைத்துள்ளேன். அதனால் மக்கள் எனக்கு ஆதரவு அளித்துள்ளனர். இனியும் அந்த ஆதரவு தொடரும்” என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தேர்தல் உலா - 2021: திருநெல்வேலி எதிர்பார்ப்பும், களநிலவரமும்...!

ABOUT THE AUTHOR

...view details