தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 19, 2023, 9:38 AM IST

ETV Bharat / state

‘முதலமைச்சர் கூறியது இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை’ - நயினார் நாகேந்திரன்

காவிரி பிரச்னையை விட இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்பதே தற்போது மிக முக்கியம் என முதலமைச்சர் சொல்லியுள்ளது 2023ஆம் ஆண்டுக்கான மிகப்பெரிய நகைச்சுவை என தமிழ்நாடு பாஜக சட்டமன்ற குழுத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Nainar Nagendran said Chief Minister statement to save India is the biggest joke of 2023
நயினார் நாகேந்திரன் பேட்டி

நயினார் நாகேந்திரன் பேட்டி

திருநெல்வேலி :தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர், அவரது மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்பியுமான கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதில் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ள நிலையில், மீண்டும் திமுக அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்ட பாஜக அலுவலகத்தில் வைத்து தமிழ்நாடு பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு குரல் கொடுக்காத தமிழ்நாடு அரசுக்கு பாஜக கடும் கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறது. 1974இல் நதி ஒப்பந்தத்தை புதுபிக்காததால் காவரி பிரச்னை ஏற்பட்டது.

இதையும் படிங்க: “2024-ல் புதிய இந்தியா உருவாகும்” - எதிர்கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி

பாஜக ஆட்சிக்கு பின்னர் காவிரி விவகாரத்தில் நதி நீர் ஆணையம் மூலம் தீர்வு கிடைத்துள்ளது. தற்போது கர்நாடக அரசின் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கண்டனம் கூட தெரிவிக்க மறுக்கிறார். தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக பேச தயங்குகிறார், தமிழ்நாடு முதலமைச்சர்.

அமலாக்கத்துறை சோதனைக்கும், பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது தன்னிச்சையாக செயல்படும் அமைப்பு. பாஜக தமிழர்களுக்கு எதிரான விஷயங்களில் விட்டுக்கொடுக்காது. தமிழ்நாடு முதலமைச்சர், 2024இல் பாஜக வெற்றியடைந்தால் இந்தியாவே இருக்காது, இந்தியாவை பாதுகாக்கும் நோக்கில் எதிர்கட்சி கூட்டத்துக்கு செல்வதாக முதல்வர் சொல்லியுள்ளார்.

இதையும் படிங்க: ED, CBI அரசியல் கட்சியின் அங்கமாக செயல்படுகிறது - அமைச்சர் மனோ தங்கராஜ் சாடல்!

காவிரி பிரச்சனையை விட இந்தியாவை காப்பதே முக்கியம் என முதல்வர் சொல்லியுள்ளது 2023 ம் ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை. 2024 தேர்தலில் இந்தியாவின் பாரதபிரதமராக மோடி வருவார். பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். மத்திய அரசு நீர்பாசன துறை மேகாதாட்டு அணை விவகாரத்தில் தமிழ்நாடு புதுவை மாநில அரசுகளிடம் கலந்தாலோசனை நடத்தாமல் எந்த முடிவும் எடுக்கப்படாது என சொல்லியுள்ளது.

மத்திய அரசு தமிழர் நலனில் அக்கறை கொண்டுள்ளது. தமிழகத்தில் 10 தொகுதிகளை கண்டறிந்து தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எந்தெந்த தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என ஆட்சி மன்ற குழு கூடி முடிவு செய்யும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Ponmudi ED Raid: நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள்.. 6 மணி நேரம் நடந்த 2ஆம் நாள் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details