நெல்லை மாவட்டம் நாங்குநேரி இடைத்தேர்தல் வருகிற 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி அப்பகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றும் நாளையும் நாங்குநேரி தொகுதியின் பல்வேறு இடங்களில் பரப்புரை செய்வதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாங்குநேரி தொகுதிக்கு வருகை தந்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து நேரடியாக நாங்குநேரி தொகுதிக்கு வந்த அவர் அரியகுளம் மற்றும் மேலகுளம் ஆகிய பகுதிகளில் திண்ணைப் பரப்புரையில் ஈடுபட்டு காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.