தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒற்றை சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்துக - மூட்டா சங்கம்

அனைத்து கலைக் கல்லூரிகளிலும் ஒற்றை சாரள முறையில் மாணவர் சேர்க்கை நடத்த, தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என மூட்டா சங்கம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய மூட்டா பொதுச் செயலாளர் நாகராஜன்
செய்தியாளர்களிடம் பேசிய மூட்டா பொதுச் செயலாளர் நாகராஜன்

By

Published : Aug 12, 2021, 4:48 PM IST

திருநெல்வேலி: கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் மத்தியில் பெரிய நாட்டமின்மையும் நிலவி வருகிறது. தற்போது இதுகுறித்து மூட்டா பொது செயலாளர் நாகராஜன் திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “கல்லூரிகள் திறக்கப்படுவது வரவேற்புக்குறியது. ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டாலும், அது மாணவர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆகையால் சுழற்சி முறையில் அரசு நேரடி வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்தியாளர்களிடம் பேசிய மூட்டா பொதுச் செயலாளர் நாகராஜன்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை

கரோனா 3ஆவது அலையின் காரணமாக கல்லூரிகள் திறப்பதை தாமதப்படுத்தக் கூடாது. கலை அறிவியல் கல்லூரிகளில் சேர, மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

ஆகையால் ஏழை, எளிய மக்களுக்கு கல்வி கிடைக்கும் வகையில் ஒற்றை சாளர முறையை பின்பற்றி, அரசே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்கள், கல்லூரியில் சேரும் போது 7 சதவீதம் முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க:பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details