திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. திமுக முன்னாள் மேயரான இவர் தனது கணவருடன் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று மாலையில் அவரது வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர், பணிப்பெண் ஆகிய மூன்று பேரையும் கண் இமைக்கும் நேரத்தில் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.
நெல்லையில் திமுக முன்னாள் மேயர் வெட்டிப் படுகொலை - ex mayor
திருநெல்வேலி: ரெட்டியார்பட்டியில் வசித்து வந்த திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூன்றுபேரை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
murder
பின்னர் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Last Updated : Jul 23, 2019, 8:52 PM IST