திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் முப்பிடாதி. கூலி தொழிலாளியான இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர் வண்ணாரப்பேட்டை தெருவில் தாமிரபரணி நதிக்கரையில் வீடுகட்டி 12 வருடங்களுக்கு மேலாகக் குடியிருந்து வருகிறார். மேலும் இவரது உறவினர் என்று கூறப்படும் அண்ணாமலை, இவர் வீட்டின் அருகே வசித்து வருகிறார்.
அண்ணாமலை ஆடு வளர்க்கும் தொழில் உடன் கூலி தொழிலும் செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முப்பிடாதி தனது வீட்டை சீரமைத்தபோது அண்ணாமலைக்கு சொந்தமான இடத்தைச் சேர்த்து வீடு கட்டியதாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் அண்ணாமலை தனது ஆடுகளை பட்டியில் கட்டாமல் காலை நேரத்தில் முப்பிடாதி வீட்டு அருகே உள்ள காலி இடத்தில் அவிழ்த்துவிட்டு செல்வதால் வீட்டில் உள்ள பொருள்களை அடிக்கடி நாசம் செய்து விடுவதாகவும் அதன் காரணமாக அடிக்கடி இருவருக்கும் சண்டை ஏற்படுவதாகவும் தெரிகிறது.