தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனோவை பயன்படுத்தி முறைகேடு நடத்தியது அதிமுக - எம்.பி. கனிமொழி

கடந்த அதிமுக ஆட்சியில் கரோனோவை பயன்படுத்தி பல்வேறு முறைகேடு நடைபெற்றுள்ளதாக திமுக நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறினார்.

kanimozhi
kanimozhi

By

Published : Sep 25, 2021, 9:08 AM IST

திருநெல்வேலி கிழக்கு மாவட்டத்திற்கு உள்பட்ட பாளையங்கோட்டை ஒன்றிய திமுக, கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் ரெட்டியார்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் திமுக மாநில மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி நாடளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, அமைச்சர்கள் கீதாஜீவன், மனோ தங்கராஜ், ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது கனிமொழி பேசுகையில், "தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் கரோனா காலத்தை பயன்படுத்தி மக்களை பாதுகாக்காது பிளிச்சிங்பவுடர் முதல் துடப்பம் வரை கொள்ளையடிப்பதில்தான் குறியாக இருந்தார்கள்.

அதில் இருந்து மக்களை மீட்டு பாதுகாப்பான ஆட்சி தற்போது நடந்து வருகிறது. மக்களோடு நேரடி தொடர்பில் இருப்பது உள்ளாட்சி அமைப்புதான். எனவே அரசின் திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு செல்லும் பொறுப்பு உள்ளாட்சி அமைப்பிற்கு உள்ளது.

திமுக ஆட்சியில் நல்ல திட்டங்களை மக்களிடம் எடுத்துச்செல்லும் வகையில், ஒரு இடத்தில் கூட தோல்வி என்ற நிலை இல்லாது 100 விழுக்காடு உள்ளாட்சி அமைப்புகளில் திமுக வெற்றி பெற பாடுபடவேண்டும்" என்றார்.

முன்னதாக அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், "முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து அமைச்சகத்தின் மூலம் அனைத்து துறைகள் மூலம் வாக்குறுதிகளை அனைத்தும் நிறைவேற்றி வருகிறார்.

வாக்குறுதிகளை பெற்று தருவதில் பாலமாக இருப்பது ஒன்றிய கவுன்சிலர்கள், அரசு திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு சென்றடைய இந்த தேர்தல் நடைபெறுகிறது. திமுக அரசின் சாதனைகளை சொல்லி மக்களிடம் வாக்குகளைப் பெற வேண்டும்" என தெரிவித்தார்.

அதன் பின் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், "திருநெல்வேலி மாவட்டத்திற்கு திமுக ஆட்சிகாலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை கூறி மக்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டும். 5 ஆண்டுகளில் 50 ஆண்டுகள் சாதனை கொடுத்தது திமுக ஆட்சி.

சொன்ன கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றும் ஒரே இயக்கம். ஆட்சி, சாதனைகள் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் அதிமுகவிற்கு கிடையாது. வரலாறு தெரியாத முதலமைச்சர் 4 ஆண்டுகளாக ஆட்சி புரிந்துள்ளார்" என குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: 'தூத்துக்குடியில் டைடல் பார்க் அறிவிக்கப்படும்' - கனிமொழி

ABOUT THE AUTHOR

...view details