திருநெல்வேலி: காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு நிறுவப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் மற்றும் அன்னை இந்திரா காந்தி ஆகியோரின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக திமுக மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி நெல்லை வந்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற சிலை திறப்பு விழாவில் அவர் பங்கேற்றுப் பேசினார். பின்னர் அவர் நெல்லை அடைமிதிப்பான் குளம் கல்குவாரி விபத்தில் சிக்கி காயமடைந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் முருகன் மற்றும் விஜய் ஆகிய இருவரையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.