தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொலைசெய்யப்பட்ட திமுக நிர்வாகியின் தாய் தேர்தலில் போட்டி - கொலை செய்யப்பட்ட திமுக நிர்வாகியின் தாய் தேர்தலில் போட்டி

திருநெல்வேலியில் அரசியல் பகையால் சொந்த கட்சிக்காரரால் கொலைசெய்யப்பட்ட திமுக நிர்வாகியின் தாய் தேர்தலில் போட்டியிட கட்சித் தலைமை வாய்ப்பு வழங்கியுள்ளது.

திமுக நிர்வாகியின் தாய் தேர்தலில் போட்டியிட கட்சி தலைமை வாய்ப்பு வழங்கியுள்ளது
திமுக நிர்வாகியின் தாய் தேர்தலில் போட்டியிட கட்சி தலைமை வாய்ப்பு வழங்கியுள்ளது

By

Published : Feb 4, 2022, 2:25 PM IST

திருநெல்வேலி:பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த பொன்னுதாஸ் என்ற அபே மணி திமுகவில் வார்டு செயலாளராக இருந்தார். சில நாள்களுக்கு முன்பு அபே மணி அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

காவல் துறையினரின் விசாரணையில் அரசியல் பகை காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு திமுக பிரமுகர் அருண் பிரவீன் என்பவர்தான் திட்டமிட்டு கூலிப்படை மூலம் அபே மணியை கொலைசெய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் அபே மணி உள்பட 12 பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கொலைசெய்யப்பட்ட அபே மணியின் தாய் பேச்சியம்மாள் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நெல்லை மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட கட்சியில் விருப்ப மனு அளித்திருந்தார்.

திமுக நிர்வாகியின் தாய் தேர்தலில் போட்டியிட கட்சித் தலைமை வாய்ப்பு வழங்கியுள்ளது

அதே சமயம் அருண் பிரவீன் தனது உறவினர் ஒருவரை அதே பதவியில் போட்டியிட முயற்சித்ததாகவும், அதற்கு தடையாக இருந்த காரணத்தால் அபே மணியை கொலைசெய்ததாகவும் காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.

வேட்புமனு தாக்கல்

மேலும் அபே மணி நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அப்துல் வகாப்புக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்துவந்தார்.

எனவே ஏற்கனவே கட்சியில் அபே மணிக்கு இருந்த செல்வாக்கு, அவரது கொலைக்குப் பின்பு ஏற்பட்ட அனுதாபம் ஆகிய காரணங்களில் எதிர்பார்த்தபடி அவரின் தாயார் பேச்சியம்மாள் தேர்தலில் போட்டியிட திமுக தலைமை வாய்ப்பு வழங்கியுள்ளது.

அதன்படி 35ஆவது வார்டில் திமுக சார்பில் பேச்சியம்மாள் போட்டியிடுகிறார். இதையொட்டி பேச்சியம்மாள் இன்று (பிப்ரவரி 4) கட்சி நிர்வாகிகளுடன் சென்று பாளையங்கோட்டை மண்டல அலுவலரிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல்செய்தார்.

மகனின் ஆசைப்படி தேர்தலில் வெற்றி

இதற்கிடையில் தற்போதுவரை 35 ஆவது வார்டில் பேச்சியம்மாளை தவிர வேறு யாரும் மனு தாக்கல்செய்யவில்லை. இன்றுடன் மனு தாக்கல் முடிவடையும் நிலையில் தொடர்ந்து யாரும் மனு தாக்கல்செய்யாத பட்சத்தில் பேச்சியம்மாள் போட்டியின்றி கவுன்சிலராகத் தேர்வுசெய்யப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் பேச்சியம்மாள் வெற்றிபெறும்பட்சத்தில் அவருக்கு மண்டலக் குழுத் தலைவர் பதவி வழங்கவும் கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஒருபுறம் மகனைப் பறிகொடுத்த துக்கம் தீராவிட்டாலும் தனது மகனின் ஆசைப்படி தேர்தலில் வெற்றிபெற்று கவுன்சிலராக வேண்டும் என்ற நோக்கத்துடன் பேச்சியம்மாள் தேர்தலில் களம் காண்கிறார்.

இதையும் படிங்க:சிறையில் சொகுசு கேட்கும் பப்ஜி மதன்: மனைவியிடம் கையூட்டு கேட்ட அலுவலர் - வைரலாகும் ஆடியோ!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details