தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரசவம் பார்த்த செவிலி - தாய், சேய் பலி!

நெல்லை:  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாத நிலையில் செவிலியால் பிரசவம் பார்க்கப்பட்டு தாய், சேய் இருவரும் சில மணி நேரத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய் பலி

By

Published : Jun 7, 2019, 8:23 AM IST

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி அருகே உள்ள கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி அகிலா (24) கர்ப்பிணியான இவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டதால் களக்காடு அருகே திருக்குறுங்குடி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் நேற்று (வியாழக்கிழமை) மாலை 3:00 மணியளவில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்பொழுது, மருத்துவர்கள் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பணியிலிருந்த செவிலி பிரசவம் பார்த்துள்ளார். மாலை 6:45 அளவில் அகிலாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பின் திடீரென தாயிற்கும், குழந்தைக்கும் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த செவிலி, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களுக்கு இதுகுறித்து தகவல் கொடுத்தார்.

உயிரிழந்த பிஞ்சு குழந்தை

அங்கிருந்து மருத்துவர்கள், இரவு 8 மணி அளவில் சேய், தாய் ஆகியோர் இறந்ததாக உறவினர்களிடம் கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த அகிலாவின் உறவினர்கள், கட்டளை கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து நாங்குநேரி வட்டாட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details