திருநெல்வேலி மாவட்டம் மானூரை சேர்ந்தவர் இசக்கிநாயுடு (75). இவர் கடந்த செப் 26ஆம் தேதியன்று தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வீட்டுக்குள் பீரோவில் இருந்த சுமார் 11 பவுன் தங்க நகைகள், ஒரு லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
11 சவரன் நகையுடன் 1 லட்சம் பணம் கொள்ளை! - காவல்துறை விசாரணை
திருநெல்வேலி: மானூர் அருகே வீட்டில் புகுந்து 11 சவரன் நகையையும், ஒரு லட்சம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
1 லட்சம் பணம் கொள்ளை
இதுதொடர்பாக மானூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில், இசக்கியாயுடு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னை ஐ.சி.எப் ரயில்வே பாதுகாப்புப்படை வீரர் தற்கொலை