தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"குண்டர்களால் தொண்டர்கள் தாக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது" - ரூபி மனோகர்

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது என்று கூறிய சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணையில் ஆஜராக கால அவகாசம் கேட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

’குண்டர்களால் கட்சித் தொண்டர்கள் தாக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது..!’ - எம்.எல்.ஏ ரூபி மனோகர்
’குண்டர்களால் கட்சித் தொண்டர்கள் தாக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது..!’ - எம்.எல்.ஏ ரூபி மனோகர்

By

Published : Nov 24, 2022, 6:57 PM IST

திருநெல்வேலி:நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் வருகை தந்த தமிழக காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும், நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினருமான ரூபி மனோகரன் நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்புள்ள இந்திரா காந்தி மற்றும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வருவதாக தகவல் வந்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தை பூட்டிவிட்டு நிர்வாகிகள் அங்கிருந்து வெளியேறினர்.

இதனையடுத்து தனது ஆதரவாளருடன் வந்த எம்.எல்.ஏ ரூபி மனோகரன் காமராஜர் மற்றும் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவிட்டு பூட்டியிருந்த அலுவலகத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். நியாயமான கோரிக்கைக்கு எனது தொகுதி கட்சி உறுப்பினர்கள் கட்சி தலைமை அலுவலகத்திற்கு சென்றார்கள்.

அவர்கள் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளனர், காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது. அனைத்து கட்சிகளிலும் இதுபோன்ற பிரச்சினை நடப்பது இயல்புதான். பொதுவெளியில் அதைப் பற்றி பேச விரும்பவில்லை. என்ன நடந்தது என்பது தொடர்பாக தேசிய தலைவர் கார்கேவிடம் புகாராக தெரிவித்துள்ளோம்.

இந்த பிரச்சனைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது தொகுதி மக்கள் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்கு வந்தார்கள், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சத்தியமூர்த்தி பவன் என்பது காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு கோயிலைப் போன்றது. கோயிலுக்குச் செல்லும்போது கத்தியை யாராவது எடுத்துச் செல்வார்களா..? இன்று(நவ.24) எனக்கு ஒழுங்கு நடவடிக்கை குழுவில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டி இருந்தது. தொகுதியில் பல்வேறு பணிகளுக்காக முன்கூட்டியே திட்டமிட்டு இருந்ததன் காரணமாக ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டு கடிதம் அனுப்பியுள்ளேன். என் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுங்கள். கட்சி அலுவலகத்திற்கு அடியாட்கள் வந்திருக்கலாம்,

’குண்டர்களால் கட்சித் தொண்டர்கள் தாக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது..!’ - எம்.எல்.ஏ ரூபி மனோகர்

நிச்சயமாக கட்சிக்காரர்கள் யாரும் சக கட்சிக்காரர்களை தாக்கி இருக்க மாட்டார்கள். குண்டர்கள்தான் தாக்கியிருக்கலாம் , உட்கட்சி விவகாரம் நிச்சயமாக பேசி முடிவெடுக்கப்படும். நெல்லை மாவட்ட தலைவர் ஜெயக்குமார் எனக்கு நல்ல நண்பர். அவரோடு இணக்கமாக செயல்பட்டு இருக்கிறேன்" என தெரிவித்தார். இதற்கிடையில் ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு ஆஜராகாததால் ரூபி மனோகரன் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இப்படி அமைச்சர்கள் கிடைத்தால் முதல்வரால் எப்படி தூங்க முடியும்? : ஜான் பாண்டியன்

ABOUT THE AUTHOR

...view details