தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் விவகாரத்தில் இரட்டை வேடம் இல்லை'- நயினார் நாகேந்திரன் - Tirunelveli district news in tamil

நீட் தேர்வு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடவில்லை எனவும் இந்த விவகாரம் தற்போது முடியக்கூடிய விவகாரம் இல்லை எனவும் சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

mla-nainar-nagendran-no-double-stand-in-neet-issue
நீட் விவகாரத்தில் இரட்டை வேடம் இல்லை'- நயினார் நாகேந்திரன்

By

Published : Jun 29, 2021, 8:01 PM IST

திருநெல்வேலி:திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினரும் பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவருமான நயினார் நாகேந்திரன் இன்று மேடை கலைஞர்களுக்கு நல உதவிகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக இதுவரை மத்திய அரசு என்று சொல்லிவிட்டு தற்போது ஒன்றிய அரசு என்று சொல்லுகிறது. அவர்களின் சொல்லில் குற்றமில்லை, பொருளில்தான் குற்றமிருக்கிறது.

ஜெய்ஹிந்த் என்பது நமது நாடு, நமது தேசம் மீதுள்ள பற்றை வெளிப்படுத்துகிறது. ஜெய்ஹிந்த் என்றால் தாய்நாடு வெற்றி பெறவேண்டும் என்பது பொருள். ஜெய்ஹிந்த் முழக்கத்தை சட்டப்பேரவையில் சொல்லித்தான் புரியவைக்கவேண்டும் என்ற தேவை இல்லை.

மேலும், நீட் தேர்வு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடவில்லை. இந்த விவகாரம் தற்போதைக்கு முடியக்கூடிய விவகாரம் இல்லை. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீட் தேர்விற்கு தற்போது விலக்கு கிடைக்காது என்பது தெரிந்தும் நீட் தேர்வு குறித்து திமுக பேசி மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறது" என்றார்.

இதையும் படிங்க:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் - எல்.முருகன்!

ABOUT THE AUTHOR

...view details