திருநெல்வேலி: மாநகரத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ், ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. நெல்லை வேய்ந்தான் குளம் அருகே 4 நடைமேடைகள் உடன் அமைந்திருந்த புதிய பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு கூடுதலாக இரண்டு நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தரை தளம், முதல் தளம் என வணிக வளாகம் போன்று கடைகளும் கட்டப்பட்டுள்ளன. ஏற்கெனவே 131 கடைகள் இருந்த நிலையில் தற்போது கூடுதலாக 65 கடைகள் பெரியளவில் கட்டப்பட்டுள்ளன. மேலும் டிஜிட்டல் வடிவ பிரமாண்ட திரைகள், மாணவர்கள் அறிவியல் திறனை வளர்த்துக்கொள்ளும் வகையில் அறிவியல் பூங்கா என 50 கோடி ரூபாய் மதிப்பில் பேருந்து நிலையம் நவீனப்படுத்தப்பட்டுள்ளது.
பேருந்து நிலையம் திறப்பு
இதுபோன்று பாளையங்கோட்டை பேருந்து நிலைய பழைய கட்டடங்களை இடித்து அகற்றி விட்டு, அங்கு புதிதாக 13.08 கோடியில் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது.