திருநெல்வேலி: திசையன்விளை தாலுகா கோட்டைக்கருங்குளம் நம்பியாறு அணை தேக்கத்திலிருந்து இன்று (நவ.29) காலை 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் நம்பியாறு கால்வாய் செல்லும் பல்வேறு குளங்கள் நிரம்பி வருகின்றன. திசையன்விளைக்கு அருகில் உள்ள ஆயன்குளம் படுகை நிரம்பி தண்ணீர் வழிந்து ஆற்றுப் படுகைக்கு அருகிலுள்ள இரண்டு அதிசய கிணற்றுக்குள் செல்கிறது.
இங்குள்ள ஒரு கிணற்றில் செல்லும் தண்ணீர் எங்க போகுதுன்னே தெரியல? என்பதுதான் அதிசயம்.
மழைக்காலம் மற்றும் அணை திறப்பு காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு எவ்வளவு நீர் இந்த கிணற்றுக்குள் சென்றாலும் அந்த தண்ணீர் எங்க போகுதுன்னே தெரியாது. இதுவரை அந்த கிணறு நிரம்பிய சரித்திரமே கிடையாது.
இக்கிணற்றுக்குள் செல்லும் தண்ணீர் இப்பகுதியை சுற்றியுள்ள 25 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயரவும், நிலத்தடி உப்புத் தண்ணீர் நல்ல தண்ணீராக மாறவும் பயன்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் அரசும், மாவட்ட நிர்வாகமும் இந்த கிணற்றின் மீது தனி கவனம் செலுத்தி வீணாக கடலுக்கு செல்லும் உபரி நீரை ஆயன்குளம் அதிசய கிணற்றுக்குள் திருப்பிவிட வேண்டும் என கோரிக்கை எழுந்தள்ளது.
எவ்வளவு தண்ணீர் வந்தாலும் தனக்குள் ஏற்றுக் கொள்ளும் இந்த அதிசய கிணறை பார்வையிட பல பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இதையும் படிங்க:Rowdy baby surya: 'ரவுடிபேபி சூர்யாவைக் கைது செய்யவில்லை என்றால் தற்கொலை செய்வேன்' - பாதிக்கப்பட்ட பெண்