கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழ்நாடு அரசு ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மகளிரின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு வங்கிகள் மூலம் கடன் உதவிகள் அளிக்க உத்தரவிட்டது.
அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மகளிரின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் மாவட்ட மகளிர் குழுக்களுக்கு ரூ. 1.50 கோடி மதிப்பில் கடன் உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.